ரூ.88 கோடி மோசடி : சென்னை நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு

CBI files case : இந்த நிறுவனம் 2009 முதல் 2013ம் ஆண்டில் மற்றொரு வங்கியில் பெற்றிருந்த ரூ.116 கோடி கடனை திருப்பி கட்டுவதற்காக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம், போலி கணக்கை காட்டி இந்தளவிற்கு கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Thangam Steels, chennai,sbi,state bank of india,chennai firm,non-performing asset,credit facility account, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
Thangam Steels, chennai,sbi,state bank of india,chennai firm,non-performing asset,credit facility account, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தங்கம் ஸ்டீல்ஸ் லிமிடெட் நிறுவனம், 2008 முதல் 2014ம் ஆண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து ரூ.88.27 கோடிகளை, வர்த்தக விரிவாக்கத்திற்காக கடனாக பெற்றது. கடன்தொகையை, இந்நிறுவனம் திரும்பிச்செலுத்தாத காரணத்தினால், இந்த தொகையை, வராக்கடனாக, எஸ்பிஐ வங்கி, 2013 மே மாதம் அறிவித்தது. இதனையடுத்து,எஸ்பிஐ வங்கி கொடுத்த புகாரின் பேரில், மத்திய புலனாய்வு அமைப்பு, தங்கம் ஸ்டீல்ஸ் லிமிடெட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிஎஸ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இயக்குனர்களாக பி கே வடியாம்பாள் மற்றும் பி கே சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் ஸ்டீல்ஸ் லிமிடெட் நிறுவனம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.109 கோடி அளவில் கடன் கோரி விண்ணப்பித்திருந்தது. அதற்கான உத்தரவாதத்தை நாங்கள் கேட்டபோது அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர். பின்னர், அவர்களுக்கு கொடுத்த கடன்தொகை திரும்பவராதநிலையில், வங்கி சார்பில் சிபிஐ அமைப்பிடம், ஜூன் 25ம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

2008 முதல் 2014ம் ஆண்டு வரையில், இந்நிறுவனம் கட்ட வேண்டிய கடன்தொகையை கட்டவில்லை. இதன்மூலம் வங்கிக்கு ரூ.88.27 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான அறிக்கை, 2019 மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது மோசடி என்று 2019 ஆகஸ்ட் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தை, 2017ம் ஆண்டில் பிஎஸ்கே குழுமம் தன்வசப்படுத்தியது, தங்கம் ஸ்டீல் லிமிடெட் நிறுவனம், பல்வேறு நிறுவனங்களின் ஸ்டீல் தேவைகளை நிறைவேற்றி வந்தது. பொருட்களை பெற்றவர்கள், உரியநேரத்தில் பணத்தை திரும்ப தராததால், தங்கள் நிறுவனம் கடும் இழப்பை சந்தித்துள்ளதாக வங்கியிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தங்கம் ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ரூ.93.31 கோடி அளவிற்கு கடன் வழங்கியிருந்த நிலையில், அதில் சிறிது பணம் வசூலித்து இருந்தது.

இந்த நிறுவனம் அதிக டர்ன்ஓவரை காட்டி, வங்கியிடம் இருந்து அதிகளவில் கடன்பெற்று ஏமாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் 2009 முதல் 2013ம் ஆண்டில் மற்றொரு வங்கியில் பெற்றிருந்த ரூ.116 கோடி கடனை திருப்பி கட்டுவதற்காக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிடம், போலி கணக்கை காட்டி இந்தளவிற்கு கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thangam steels chennaisbistate bank of indiachennai firmnon performing asset

Next Story
அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்காத கொரோனா பயம்! யாருக்கெல்லாம் பாசிடிவ் ? நெகடிவ்?news in tamil covid news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com