thangam-thennarasu | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செனனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மழை வெள்ளத்துக்கு முன் அமைச்சர் 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன” என்றார். மழை வெள்ளத்துக்கு பின் 50 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துவிட்டன” என்கிறார்.
சென்னை கட்டமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 ஆயிரம் கோடி என்ன ஆனது? எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டபோது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் கூட்டணிக்காக டெல்லி சென்றிருந்தார்.
என் மண் என் மக்கள் என அவர் களத்தில் இருத்திருக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதற்கு காட்டமாக பதில் அளித்துள்ள தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “மழை பெய்யும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்கே இருந்தார் என நிர்மலா சீதாராமன் கேள்வியெழுப்பி உள்ளார். இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு சென்றதை சுட்டிக் காட்டி இவ்வாறு பேசியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம் திட்டமிடப்பட்டது. மணிப்பூர் பற்றி எரிந்தபோது இவர்கள் எத்தனை முறை அங்கு சென்றார்கள்.
காய்கறி வாங்க மயிலாப்பூர் செல்லும் நிர்மலா சீதாராமன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு ஒருமுறையாவது பார்க்க வநதாரா? எனக் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை அவர் அவமானப்படுத்துகிறார்” என்றும் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“