Advertisment

மோடி முதல்வராக இருந்தபோது வெளிநாடு சென்றார்; தங்கம் தென்னரசு

பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பல நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார் என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Thangam Thanaras reply to Governor R N Ravis comments o Cms Foreign visit

அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுனர் ஆர்.என். ரவியின் பேச்சு அவர் முழு அரசியல்வாதி போலவே உள்ளன.

Advertisment

தமிழ்நாட்டை தமிழகம் என அவர் மாற்ற மேற்கொண்ட முயற்சிகள், திராவிட நாடு என்ற ஒன்று கிடையாது என அதற்கு எதிராக ஆளுநரின் பேச்சுக்கள் என தமிழகத்துக்கு எதிரான பேச்சுகள் தொடர்ந்தன.

தற்போது தொழில் முதலீடுகளை இருப்பதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட பயணங்களை மறைமுகமாக சாட்டியிருப்பது போல் அவரது பேச்சுக்கள் உள்ளன” என்றார்.
ஆளுனர் ஆர்.என். ரவி முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்தார் என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தங்கம் தென்னரசு இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பல நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார் என தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Stalin Governor Rn Ravi Thangam Thennarasu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment