Advertisment

தவறுதலாக வார்த்தையை விட்ட தங்கம் தென்னரசு; வருத்தம் தெரிவித்து பதிவு

எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன்; வருத்தம் தெரிவித்து தங்கம் தென்னரசு ட்விட்டரில் பதிவு

author-image
WebDesk
Nov 21, 2023 18:59 IST
New Update
Minister Thangam Thanarasu has condemned the violent incident in the Neyveli protest

எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன்; வருத்தம் தெரிவித்து தங்கம் தென்னரசு ட்விட்டரில் பதிவு

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தவறுதலாக கூறிய வார்த்தை குறிப்பிட்ட பிரிவினரை புண்படுத்தியதாக தெரியவந்த நிலையில், உடனடியாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும், சட்டசபையில் நிறைவேற்றுவது குறித்த, சிறப்புக்கூட்டம் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து கட்சிகளுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். பா.ஜ.க மசோதாக்களை ஏற்க மறுத்து, தனது கருத்தை பதிவு செய்துவிட்டு, வெளிநடப்பு செய்தது.

அதேநேரம், அ.தி.மு.க 9 மசோதாக்களை ஏற்பதாக கூறினாலும், மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை மாற்றுவது தொடர்பான மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

கூட்டம் முடிந்தப் பிறகு, செய்தியாளரகளைச் சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ​​எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநடப்பை கடுமையாக விமர்சித்தார். "அவையில் தன்னுடைய கருத்துக்களை எடுத்து வைத்து விட்டு, வெளிநடப்பு செய்வதற்காக வேண்டுமென்றே, ஒரு காரணத்தை வலிந்து தேடி, ஆங்கிலத்தில் Lame Excuse என்று சொல்வார்கள். ஒரு "நொண்டிச் சாக்கினை" கண்டுபிடித்துச் சொல்லி, அவரும் அ.தி.மு.க உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள்.

ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அந்த பெயர் இல்லாமலேயே இந்த சட்ட முன்வடிவு இங்கு கொண்டு வரப்படுகிறது. அதனால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று ஒரு காரணத்தைச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார். ஆனால் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நாங்கள் மீண்டும் நிறைவேற்றியுள்ளோம்" என்று தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.

இதனையடுத்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் இந்த பேச்சுக்கு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மாற்றுத்திறனாளிகள், குடும்பத் தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். அந்தவகையில், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஜான்சிராணி தலைமை வகித்தார்.

அப்போது பேசிய சங்கத்தின் தலைவர் ஜான்சி ராணி செய்தியாளர்களிடம் பேசியபோது, ​​"கடந்த, 18 ஆம் தேதி நடந்த, தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரின்போது, ​​நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்தார். அப்போது, ​​அ.தி.மு.க.,வினர், 'நொண்டி சாக்கு' கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அரசியல் ரீதியான, ஆரோக்கியமான விமர்சனங்களைச் சொல்ல பல வார்த்தைகள் உள்ளன, ஊனத்தை குறிப்பிட்டு நையாண்டி செய்து விமர்சிப்பது ஏற்க முடியாதது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின், உடனடியாக தலையிட்டு, அமைச்சரின் தவறை சுட்டிக் காட்ட வேண்டும். நித்தியமைச்சரும் மாற்று திறனாளிகளிடம் மன்னிப்பு கோர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், "நொண்டி சாக்கு" என்ற தனது பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில், கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன் படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன். மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Thangam Thennarasu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment