/indian-express-tamil/media/media_files/96oA2l5EzdKcg6LcLC7g.jpg)
கோவையில் ஐ.டி பூங்கா மற்றும் கலைஞர்பெயரில்பிரம்மாண்ட நூலகம் அமைய உள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று 2024- 2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது தாக்கல் செய்து வருகிறார்.
” கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். கோவையில் கலைஞர் பெயரில் மாபெரும் நூலகம் அமைக்கப்படும் ” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் உள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது கோவையில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.