Cuddalore | Thangar Bachan | Pmk | பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குனர் தங்கர் பச்சான், கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவர் போட்டியிட மறுப்பதாக சிலர் செய்திகளை திட்டமிட்டு பரப்பியுள்ளனர்.
இதனை தங்கர் பச்சான் கண்டித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தங்கர் பச்சான், “கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. பா.ம.க, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
பா.ஜ.க. அணியில் பா.ம.க-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக கூட்டணியில் பாமக, தருமபுரி, சேலம், கடலூர்,ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடுகிறது.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. நாடு முழுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று ஜூன் 1ஆம் தேதி முடிவடைகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“