தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையின் மீது தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் கொடிகளை இணைத்து போர்த்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை உள்ளது. அண்ணா புத்தகம் படிப்பது போல் அந்த சிலை என்பது அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்தநாள், நினைவுநாள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தான் இன்று காலையில் அண்ணா சிலையின் கழுத்தில் கட்சிக்கொடிகள் போர்த்தப்பட்டு இருந்தன பாதசாரிகளால் கண்டறியப்பட்டது. மேலும் அண்ணா சிலையின் மீது திமுக மற்றும் பாஜகவின் கொடிகள் சிலையின் கழுத்தில் சுற்றப்பட்டு இருந்ததால் பாதசாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசியலில் திமுகவும், பாஜகவும் எதிரெதிர் துருவமாக உள்ளன. இப்படியான சூழலில் திமுக - பாஜக கொடிகள் அண்ணா சிலை மீது போர்த்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து அண்ணா சிலையின் கழுத்தில் கிடந்த திமுக - பாஜக கொடிகளை அகற்றினர். நள்ளிரவில் யாரோ மர்மநபர்கள் வந்து அண்ணா சிலை மீது தி.மு.க - பா.ஜ.க கொடியை போர்த்தி சென்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வணக்கம் பதிவு செய்து பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: க.சண்முகவடிவேல்.