தஞ்சை பெரிய கோயில் வரும் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தலைசிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சாவூர் பெரிய கோயில், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோயிலுக்கு வரும் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும் பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டா உடன் கூடிய சுடிதார் அணிந்து வரும்படி கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை கோயில் நுழைவு வாயில், காலணி பாதுகாக்கும் இடம் என 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“