Advertisment

தென்னக ரயில்வேயில் ''சிறப்பாக பராமரிக்கப்படும் ரயில்'' : உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறப்பு விருது

தென்னக ரயில்வேயில் சிறப்பாக பராமரிக்கப்படும் ரயில் என்ற பிரிவில் தஞ்சாவூர் - சென்னை உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Thanjavur Uzhavan Express

தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறப்பு விருது

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2022-23-ம் ஆண்டுக்கான தெற்கு ரயில்வே மண்டலத்தில் சிறந்த பராமரிக்கப்படும் ரயில்என்ற பிரிவில், தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் (வண்டி எண். 16865/16866) உழவன் விரைவு ரயிலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

சமீபத்தில் சென்னையில் பொது மேலாளர் அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட 68வது ரயில்வே வார விழாவில் திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு இந்த ரயிலுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திருச்சி கோட்ட முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் ஏ.டி. பாண்டியன், தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் முன்னிலையில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் பி.சுரேஷ், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

உழவன் எக்ஸ்பிரஸை சிறந்த பராமரிக்கப்படும் ரயிலாகதேர்வு செய்யும் போது பல்வேறு அம்சங்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொண்டது. திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு சொந்தமான 22 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் தற்போது இரு திசைகளிலும் வழக்கமான ஐசிஎஃப் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதில் ரயில் பெட்டியின் தூய்மை, கழிப்பறை பராமரிப்பு, வெளிப்புற தோற்றம், பெட்டிகளுக்குள் உள்ள கேஜெட்களின் பராமரிப்பு மற்றும் பெட்டிகளின் நம்பகத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உழவன் எக்ஸ்பிரஸை சிறந்த பராமரிக்கப்படும் ரயிலாகமதிப்பிடுவதற்கு முன் இந்த தகுதிகள் அனைத்தையும் ஆராய்ந்ததாக தெரிவித்துள்ள ரயில்வே வட்டாரங்கள், இந்த ரயில் தொடர்பாக பயணிகளின் புகார்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன என்றும் தெரிவித்துள்ளனர். உழவன் எக்ஸ்பிரஸ் என்ற இந்த தினசரி இரவு ரயிலின் முதன்மை பராமரிப்பு திருச்சி ரயில்வே சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள பரந்த அகல ரயில் பெட்டி பராமரிப்பு மையத்தில் செய்யப்படுகிறது.  

திருச்சி ரயில்வே கோட்டத்தில் இரண்டு அகலப்பாதை பெட்டி பராமரிப்பு டிப்போக்கள் உள்ளன: இதில் ஒன்று திருச்சியிலும் மற்றொன்று விழுப்புரம் ரயில்வே சந்திப்பிலும் உள்ளன. திருச்சி பி.ஜி. (BG) கோச் கேர் சென்டரில் டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU) ரேக்குகள் உட்பட சுமார் 400 பெட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. உழவன் எக்ஸ்பிரஸ் தவிர, இங்கிருந்து மாநிலங்களுக்கு இடையேயான திருச்சி - ஹவுரா - திருச்சி, மன்னார்குடி - பகத் கி கோத்தி - மன்னார்குடி மற்றும் திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்களின் முதன்மை பராமரிப்பும் ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவால் திருச்சி கோச் கேரில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது.

ரயில்களின் பெட்டிகள், பிரேக்கிங் சிஸ்டம், சக்கரங்கள், கப்லர்கள் மற்றும் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட ரயில்களின் முழு உருவாக்கமும், அதன் வெளிப்புறங்கள் தவிர, ஒவ்வொரு முறையும் முதன்மை பராமரிப்புக்காக வரும் போது, முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அதன்பிறகே மீண்டும் இயக்கத்திற்க அனுப்பப்படுகிறது. திருச்சி மற்றும் விழுப்புரம் கோச்சிங் டெப்போக்களில் ரயில் பெட்டிகளின் முதன்மை பராமரிப்புக்காக திட்டமிடப்பட்ட அட்டவணை உள்ளது.  விழுப்புரம் - காரக்பூர், புதுச்சேரி - மங்களூரு மற்றும் விழுப்புரம் போன்ற மாநிலங்களுக்கு இடையேயான விரைவு ரயில்களின் முதன்மை பராமரிப்பு பணிகள் புருலியா விழுப்புரம் கோச்சிங் டிப்போவில் செய்யப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற ரயில்வே வார விழாவில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த ரன்னர்ஸ்-அப் GM இன் செயல்திறன் கேடயம் உட்பட மொத்தம் ஒன்பது விருதுகளை திருச்சி ரயில்வே கோட்டம் பெற்றது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் எம்.எஸ். அன்பழகன், தென்னக ரயில்வே ஜெனரல் ஆர்.என்.யிடம் இருந்து GM இன் இன்டர்-டிவிஷனல் ஒட்டுமொத்த திறன் கேடயத்தை (ரன்னர்) பெற்றார். திருச்சி கோட்டத்தின் பத்து பணியாளர்கள் 2022-2023 ஆம் ஆண்டில் சிறந்த பணியாளர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியு்ளளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thanjavur Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment