/indian-express-tamil/media/media_files/ESP2mvitlD2W0YXWRBjZ.jpg)
"வேட்பாளரான முரசொலி பண்பானவர் என்றாலும் தேர்தல் செலவு செய்வதற்கு அவரிடத்தில் பணம் இல்லை" என்கின்றனர் அப்பகுதி தி.மு.க-வினர்.
க.சண்முகவடிவேல்
Thanjavur | Dmk:தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளராக புதுமுகம் முரசொலி என்பவர் போட்டியிடுகிறார். கட்சி பணியை சிறப்பாக செய்தால் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு முரசொலி உதாரணமாகி இருக்கிறார். சிட்டிங் எம்.பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட பலரும் முரசொலிக்கு வாக்கு கேட்டு களத்தில் சுழன்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் கலைஞர் அறியாவலயம் எதிரே உள்ள திடலில் தி.மு.க-விற்கான தேர்தல் பணிமனை அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ், பழநிமாணிக்கம், மேயர் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வந்து செல்வதற்கும், தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை செய்வதற்கும் மையமாக விளங்கிய தேர்தல் அலுவலகத்தை திடீரென தி.மு.க-வினர் அகற்றிவிட்டனர். இதன் காரணம் புரியாமல் தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி தி.மு.க-வினர் தெரிவிக்கையில், "கடந்த 25 ஆம் தேதி சுமார் 2,500 சதுர அடி அளவில் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்தனர். அதன் முகப்பில் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன. பணிமனைக்கு தினமும் கட்சியினர் பலரும் வந்து சென்ற நிலையில் அலுவலகத்தில் கட்டியிருந்த டெக்கரேசன் துணிகள் உள்ளிட்டவற்றை பிரித்து அலுவலகத்தை காலி செய்தனர்.
வேட்பாளரான முரசொலி பண்பானவர் என்றாலும் தேர்தல் செலவு செய்வதற்கு அவரிடத்தில் பணம் இல்லை. சில நிர்வாகிகளை தவிர முரசொலிக்காக யாரும் தேர்தல் செலவு செய்யவில்லை. தலைமை முரசொலியின் செலவை கவனித்து கொள்ள வேண்டும் என சிலரிடம் அறிவுறுத்தியுள்ளது. தலைமை சொன்னபோது தலையாட்டிய அவர்கள் களத்தில் கமுக்கமாகி விட்டனர்.
தேர்தல் பணிமனை இருந்தால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்து செல்வார்கள். அவர்களுக்கான ஸ்நாக்ஸ், சாப்பாடு உள்ளிட்டவற்றை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். இதற்கென தினமும் பல ஆயிரம் செலவாகும். ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் கண்கொத்தி பாம்பாக அனைத்தையும் கவனித்து வருகிறது. மற்றொரு பக்கம் விவசாயத்தை பின்னணியாக கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் செலவை முரசொலியால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதாலேயே தேர்தல் பணிமனை அகற்றப்பட்டிருக்கிறது" என்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.