தஞ்சாவூரில் 319583 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளில் தஞ்சாவூர் 30 ஆவது தொகுதியாகும். தஞ்சாவூர் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவை திருவையாறு, மன்னார்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி. இதில் மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
2024 மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்: முரசொலி (தி.மு.க), சிவனேசன் (தே.மு.தி.க), கருப்பு முருகானந்தம் (பா.ஜ.க), ஹூமாயூன் கபிர் (நாம் தமிழர் கட்சி)
ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 68.27% வாக்குகள் பதிவானது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் இங்கு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக வெளியாகின.
தஞ்சாவூர் தொகுதி இறுதி நிலவரம்
தஞ்சாவூரில் 319583 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முரசொலி வெற்றி பெற்றுள்ளார்.
தி.மு.க வேட்பாளர் முரசொலி – 502245 வாக்குகள்
தே.மு.தி.க வேட்பாளர் சிவனேசன் – 182662 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் – 170613 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி ஹூமாயூன் கபீர் – 120293 வாக்குகள்
மாலை 6 மணி நிலவரப்படி, தஞ்சாவூரில் 316650 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முரசொலி முன்னிலை பெற்றுள்ளார்.
தி.மு.க வேட்பாளர் முரசொலி – 498822 வாக்குகள்
தே.மு.தி.க வேட்பாளர் சிவனேசன் – 182172 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் – 169587 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி ஹூமாயூன் கபீர் – 119683 வாக்குகள்
மாலை 3 மணி நிலவரப்படி, தஞ்சாவூரில் 265263 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முரசொலி முன்னிலை பெற்றுள்ளார்.
தி.மு.க வேட்பாளர் முரசொலி – 421949 வாக்குகள்
தே.மு.தி.க வேட்பாளர் சிவனேசன் – 156686 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் – 145080 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி ஹூமாயூன் கபீர் – 100627 வாக்குகள்
மதியம் 1 மணி நிலவரப்படி, தஞ்சாவூரில் 198834 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முரசொலி முன்னிலை பெற்றுள்ளார்.
தி.மு.க வேட்பாளர் முரசொலி – 318426 வாக்குகள்
தே.மு.தி.க வேட்பாளர் சிவனேசன் – 119592 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் – 106151 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி ஹூமாயூன் கபீர் – 76879 வாக்குகள்
காலை 11 மணி நிலவரப்படி, தஞ்சாவூரில் 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முரசொலி முன்னிலை பெற்றுள்ளார்.
தி.மு.க வேட்பாளர் முரசொலி – 165232 வாக்குகள்
தே.மு.தி.க வேட்பாளர் சிவனேசன் – 63730 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் – 49821 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி ஹூமாயூன் கபீர் – 28245 வாக்குகள்
காலை 9 மணி நிலவரப்படி, தஞ்சாவூரில் இரண்டாம் சுற்று முடிவில் 14030 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முரசொலி முன்னிலை பெற்றுள்ளார்.
தி.மு.க வேட்பாளர் முரசொலி – 24,359 வாக்குகள்
தே.மு.தி.க வேட்பாளர் சிவனேசன் – 10,329 வாக்குகள்
பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் – 7,776 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி ஹூமாயூன் கபீர் – 6,305 வாக்குகள்
2019 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 5,88,978 வாக்குகள், நடராஜன் (தமிழ் மாநில காங்கிரஸ்) 2,20,849 வாக்குகள், முருகேசன் (சுயேட்சை) 1,02,871 வாக்குகள், மருதராஜா (நாம் தமிழர் கட்சி) 57,924 வாக்குகள், சம்பத் ராமதாஸ் (மக்கள் நீதி மய்யம்) 23,477 வாக்குகள்.
2014 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: பரசுராமன் (அ.தி.மு.க) 5,10,307 வாக்குகள், டி.ஆர்.பாலு (தி.மு.க) 3,66,188 வாக்குகள், கருப்பு முருகானந்தம் (பா.ஜ.க) 58,521 வாக்குகள், கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ்) 30,232 வாக்குகள், தமிழ்செல்வி (சி.பி.ஐ (எம்)) 23,215 வாக்குகள்.
2009 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 4,08,343 வாக்குகள், துரை பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க) 3,06,556 வாக்குகள், டாக்டர் ராமநாதன் (தே.மு.தி.க) 63,852 வாக்குகள்.
2004 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 4,00,986 வாக்குகள், தங்கமுத்து (அ.தி.மு.க) 2,81,838 வாக்குகள்,
1999 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 2,95,191 வாக்குகள், தங்கமுத்து (அ.தி.மு.க) 2,62,177 வாக்குகள், பி.எல்.ஏ.சிதம்பரம் (தமிழ் மாநில காங்கிரஸ்) 69,025 வாக்குகள்.
1998 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 3,24,344 வாக்குகள், எல்.கணேசன் (ம.தி.மு.க) 2,76,140 வாக்குகள், மதியழகன் (காங்கிரஸ்) 23,109 வாக்குகள்.
1996 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 3,90,010 வாக்குகள், துளசி அய்யா வாண்டையார் (காங்கிரஸ்) 1,89,582 வாக்குகள், தஞ்சை ஏ.ராமமூர்த்தி (ஜனதா தளம்) 40,259 வாக்குகள்.
1991 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: துளசி அய்யா வாண்டையார் (காங்கிரஸ்) 3,81,932 வாக்குகள், எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 2,19,862 வாக்குகள், சாகுல் ஹமீது (பா.ம.க) 9,454 வாக்குகள்.
1989 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிங்காரவடிவேல் (காங்கிரஸ்) 3,71,967 வாக்குகள், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 2,74,820 வாக்குகள்.
1984 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிங்காரவடிவேல் (காங்கிரஸ்) 3,06,351 வாக்குகள், எஸ்.பழநிமாணிக்கம் (தி.மு.க) 2,17,030 வாக்குகள், சுப்ரமணியன் (ஜக்ஜீவன் காங்கிரஸ்) 30,089 வாக்குகள்.
1980 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சிங்காரவடிவேல் (இந்திரா காங்கிரஸ்) 2,68,382 வாக்குகள், தங்கமுத்து (அ.தி.மு.க) 2,23,843 வாக்குகள்.
1977 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சோமசுந்தரம் (அ.தி.மு.க) 2,89,059 வாக்குகள், எல்.கணேசன் (தி.மு.க) 1,91,316 வாக்குகள்.
1971 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: சோமசுந்தரம் (தி.மு.க) 2,68,980 வாக்குகள், கிருஷ்ணசாமி கோபாலர் (நிறுவன காங்கிரஸ்) 1,68,972 வாக்குகள்.
1967 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: டி.எஸ்.கோபாலர் (தி.மு.க) 2,25,414 வாக்குகள், வெங்கட்ராமன் (காங்கிரஸ்) 2,02,840 வாக்குகள்.
1962 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: வைரவத் தேவர் (காங்கிரஸ்) 1,43,185 வாக்குகள், வல்லத்தரசு (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி) 1,15,112 வாக்குகள், ஸ்வயம்பிரகாசம் (சுதந்திரா கட்சி) 70,259 வாக்குகள்.
1957 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: வெங்கட்ராமன் (காங்கிரஸ்) 1,53,310 வாக்குகள், வல்லத்தரசு (பிரஜா சோஷலிஸ்ட் கட்சி) 98,222 வாக்குகள்.
1951 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: வெங்கட்ராமன் (காங்கிரஸ்) 92,483 வாக்குகள், ஸ்ரீனிவாச சர்மா (சுயேட்சை) 87,476 வாக்குகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.