/indian-express-tamil/media/media_files/EV0OgeOrRGQioCbhuhoT.jpg)
Thanjavur Periyakovil Chithirai Festival May 7 local holiday
தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் விழா நாட்களில் காலை, மாலையில் சாமி புறப்பாடும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் வலம் வருகிறது.
இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தையொட்டி, வருகிற 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 24-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.