சி.பி.எஸ்.இ தேர்வு எழுத அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை நடுவிக்காடு தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வராததால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்மந்தப்பட்ட பள்ளிக்கு 8ஆம் வகுப்பு வரை கூட அங்கீகாரம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்பொழுது வெளியாகியுள்ள நிலையில், நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வராமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.
அங்கீகாரம் இல்லாததால் சம்மந்தப்பட்ட மாணவர்கள் நாளை தேர்வு எழுத முடியாது. NIOS திட்டத்தின் கீழ், வேறு பள்ளியில் வரும் மார்ச் மாதம் விண்ணப்பம் செய்து ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கருதி இம்முறை சி.பி.எஸ்.இ தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
க.சண்முகவடிவேல்