தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!
Tamil Nadu appeals for a stay on a High Court order transferring the case to CBI Tamil News: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Tamil Nadu appeals for a stay on a High Court order transferring the case to CBI Tamil News: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
Thanjavur school student death case Tamil News: அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல் நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி, அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதத்தில் அந்த மாணவி விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Advertisment
நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதாகவும், அதனால் தான் விஷம் குடித்ததாகவும் மாணவி கூறியதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் மாணவி கூறும் மற்றொரு வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், மதம் சார்பான பிரசாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவியின் தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
இதற்கிடையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாணவி தற்கொலை வழக்கை கடந்த 31-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில் தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜோசப் எஸ். அரிஸ்டாட்டில், மாணவி தற்கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சிபிஐயிடம் ஒப்படைப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று வாதிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ள மனுவில், ஜனவரி 21, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், தனி நீதிபதியின் சில அவதானிப்புகளை நீக்குவதற்கு, போலீஸ் விசாரணையை "தள்ளுபடி செய்ய" முயன்றது உட்பட, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற ஜனவரி 31-ம் தேதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில், தனது மகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“