Advertisment

'திருமண்டங்குடி விவசாயிகள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு': அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி சுமுகமாக தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Thanjavur: Thirumandangudi farmer protest, quick remedy Minister Anbil Mahesh

Tamilnadu School Education Minister Anbil Mahesh Poyyamozhi assured quick remedy for Thirumandangudi farmer protest, Thanjavur Tamil News

க.சண்முகவடிவேல்

Advertisment

தஞ்சை மண்டலத்தின் தி.மு.க பொறுப்பாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தஞ்சாவூரில் சமுதாய வளைகாப்பு விழாவினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

publive-image

"கடந்த ஆண்டு 1 லட்சத்து 80 ஆயிரம் இடை நிற்றல் மாணவர்கள் கண்டறியப்பட்டனர். அதே போல் நிகழாண்டு கணக்கெடுக்கும் படியும், மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார் இடைநிற்றலுக்கு ஆளாவார்கள் என்பதையும் கண்டறிய உள்ளோம். நம்ம ஊர் பள்ளி திட்டத்திற்கு தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு முதல் நாளிலேயே ரூ.50 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. நன்கொடையாளர்கள் வழங்கும் பணம் சரியான வழியில், சரியானபடி செல்லுகிறது என என்றைக்கு அவர்கள் நம்புகிறார்களோ, அன்று இன்னும் அதிகமாக நன்கொடையை அவர்கள் வழங்குவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதற்கு உரிய ரசீது வழங்கப்படுகிறது .மேலும், அவர்கள் விருப்பப்பட்டு பள்ளி கட்டிடம் கட்டி கொடுத்தால் கல்வெட்டில் பெயர் பொறிக்கப்படும்.

திருமண்டங்குடியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களை அழைத்துப் பேசி, அதை எப்படி சுமுகமாக தீர்வு காணும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் அந்த தொகுதி எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை நடத்துவார். இளைஞர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதன்முதலாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தோஷமான விஷயம்."

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

இந்த நிகழ்வில், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி. நீலமேகம், கா.அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேவி நன்றி கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamilnadu Thanjavur Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment