அவதூறு கருத்து: சீமான் வீடு முற்றுகை; கார் கண்ணாடி உடைப்பு: பெரியார் கழகத்தினர் கைது

த.பெ.தி.க-வினர் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கி சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து த.பெ.தி.க-வினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

த.பெ.தி.க-வினர் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கி சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து த.பெ.தி.க-வினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

author-image
WebDesk
New Update
thanthai periyar dravidar kazhagam members arrested for protest and Siege Seamans House Derogatory comments Tamil News

சென்னையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்

தந்தை பெரியாரை பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று புதன்கிழமை அவதூறான கருத்தை பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதாக சீமானுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்து, அவரது இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிட கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி த.பெ.தி.க-வினர் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கி சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து த.பெ.தி.க-வினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

சீமானுக்கு எதிராக த.பெ.தி.க பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் முழக்கம் எழுப்பினர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்த த.பெ.தி.க-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள சமூதாயக்கூடத்திற்கு கொண்டு சென்றனர். 

இதனிடையே, சென்னையில் நா.த.க நிர்வாகியின் கார் கண்ணாடியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உடைத்துள்ளனர். இதனையடுத்து, சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

"சீமானை எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம்" என்று தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானின் வீட்டை முற்றுகையிட சென்ற த.பெ.தி.க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆவேசமாக கூறினார். 

Chennai Periyar Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: