/indian-express-tamil/media/media_files/NXbtdGRtWSpgGVRKWLQx.jpg)
தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் லுர்தம்மாள் பிறந்தநாள் 111வது விழா கன்னியாகுமரியில் நடந்தது.
TN first woman minister Lurthammal birthday celebrations :பெருந்தலைவர் காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் லூர்தம்மாள் சைமன்.
தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சரான இவரின் காலத்தில் மீனவ கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும், மீனவர்கள் 6 பேரை ஒரு குழுவாக்கி, குலுக்கல் முறையில் ஒவ்வொரு குழுவுக்கும் முதல் முதலாக இயந்திர மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையே சாரும்.
இவரின் 111வது பிறந்தநாள் விழா குளச்சல் கொட்டில்பாடு கிராமத்தில் நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் துணை செயலாளர் முனைவர் தாரகை கட்பட், திமுக மாநில மீனவர் அணியின் துணை செயலாளர் நசரேயன் பசலியான், பாஜக அயலகதுறை தமிழக தலைவர் சீமா, நாம் தமிழர் கட்சி ரீடன் டொனால்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்க தலைவர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், மேரி லூர்தம்மாள் சைமன் அவரது வாழ் நாளில் செய்த மக்கள் நலப் பணியை இன்றைய மீனவ சமுக்கத்தினரும் நாளை வரும் இளைய சமூகமும் தொடர்ந்து பணியாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.
தொடர்ந்து, குளச்சல் துறைமுகத்திற்கு லூர்தம்மாள் சைமன் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கீழமணக்குடி,மேலமணக்குடி மேம்பாலத்திற்கு லூர்தம்மாளின் பெயரை சூட்டியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், மணக்குடியில் மேரி லூர்தம்மாள் சைமனுக்கு நினைவு மண்டபம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.