கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு மற்றொரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
பெங்களூரு-சென்னை இடையே ஏற்கனவே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இது மைசூரு வரை செல்லும்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 12 ஆம் தேதி தொடங்கிவைக்கிறார். இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முந்தைய வெள்ளை மற்றும் நீல கலவையைப் போலல்லாமல் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது.
இது கடந்த வந்தே பாரத் விரைவு ரயிலை விட வேகமாக பயணிக்கும் என்றும் இரு தலைநகரங்களுக்கு இடையேயான பயணத்தை மேலும் எளிதாக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ரயில் டிக்கெட்டின் விலை பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ஹைதராபாத் கர்நாடகா பகுதியை ஐடி தலைநகருடன் இணைக்கும் பெங்களூரு மற்றும் கலபுர்கி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
புதிய வந்தே பாரத் ரயில், மைசூருவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 7.45 மணிக்கு பெங்களூரு வரும். தொடர்ந்து, மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“