Anitha Radhakrishnan | Tuticorin | Lok Sabha Election | தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் கடந்த 22ஆம் தேதி தி.மு.க வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து இந்தியா கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “சேலம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காமராஜரை புகழ்ந்து பேசினார். காமராஜருக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்.
காமராஜர், டெல்லியில் இருந்த போது அவரை உயிரோடு கொளுத்தி கொல்ல நினைத்தவர்கள், இன்று புகழ்கிறார்கள்” என்றார். அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரில், “பிரதமர் மோடியை இழிவுப்படுத்தி பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசமாக விமர்சித்துள்ளார்.
அமைச்சர் பொறுப்பில் உள்ளவரே இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தி.மு.க.வுக்கு ஒருபோதும் புகழை தராது. மேலும் இதுபோன்ற வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் ஆகும். ஆகவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“