அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி - சிதம்பரம் சாலையில் சாலையோரம் மே30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அபிநயா என்ற இளம்பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், இளம்பெண்ணின் காதலனான தஞ்சை பந்தநல்லூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு வேறு ஒரு இடத்தில் நிச்சயம் செய்யப்பட்டதும், அபிநயா தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதும் தெரியவந்தது.
எனினும் இருசக்கர வாகனத்தில் இருவரும் செல்லும் போது சாலை தடுப்புச் சுவரில் மோதி காயமடைந்ததாகவும், அபிநயாவை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பார்த்திபனிடம் போலீசாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். அபிநயா விபத்தில்தான் உயிரிழந்தாரா? வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடந்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“