Advertisment

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி- சீனுக்குள் வந்த சி.பி.சி.ஐ.டி: சிக்கலில் நயினார் நாகேந்திரன்?

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
BJP MLA Nainar Nagenthran, BJP, Nainar Nagenthran criticize AIADMK controversy, அதிமுகவுக்கு ஆண்மை இல்லையா, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பதிலடி கொடுக்கும் அதிமுக, AIADMK, BJP, Tamilnadu

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரயிலில் ஏப். 6 ஆம் தேதி இரவு, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கப் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisment

இது தொடர்பாக புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த வழக்கில் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், “பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம். வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Nainar Nagendran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment