Advertisment

கொரோனா பணியில் செவிலியர் உயிரிழப்பு.. அரசிடம் நிவாரணம் பெற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் தங்கலட்சுமி கொரோனாவால் உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியவர் தங்கலட்சுமி. இவர், 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது கணவர் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது ஏற்கனவே மத்திய அரசின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் பேக்கேஜ் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், கொரோனா பணியின் போது உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் உறவினர்கள், மத்திய, மாநில, என இரு அரசுகளிடமும் நிவாரணம் கோர முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் பலனை பெறலாம் என்றும் இழப்பீடு கோர முடியாது எனவும் தெரிவித்து உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment