/indian-express-tamil/media/media_files/0D5lvAo3ANN5RbtD3hCd.jpg)
சென்னை ஆவடி இரட்டை கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
Chennai Avadi double Murder | திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சித்த மருத்துவர், அவரது மனைவி கொல்லப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மிட்டனமல்லி பகுதியில் வசித்துவந்தவர் சிவன்நாயர். இவர், மனைவி பிரசன்னா குமாரி என்பவருடன் வசித்து வந்தார்.
கேரளத்தை பூர்விகமாக கொண்ட இருவரும், அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள் ஆவார்கள். சிவன் நாயர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
அவரது மனைவி பிரசன்னா குமாரி மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சிவன் நாயர் வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
அவரது மகன் ஹரி ஓம் ஸ்ரீ, அண்ணனூரில் சித்த மருத்துவ கிளினீக் நடத்தி வருகிறார். மகள் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை, மகன் வெளியே சென்றிருந்த வேளையில் சிகிச்சை பார்ப்பது போல வந்தவர்கள், சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த நிலையில் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
ஏற்கனவே இந்தப் பகுதியில் ரூ.1 கோடி திருடு போனது. இந்த நிலையில் தற்போது நடந்துள்ள இரட்டைக் கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us