தென்தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “இன்று (அக்.31) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை, நாளைமறுதினம் (நவ.1,2) தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இந்த மழை நவ.3 மற்றும் நவ.4ஆம் தேதிகளிலும் தொடர வாய்ப்புகள் உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகப்பட்ச வெப்பநிலை 33.34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். மேலும், மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரியில் 83.5 மி.மீ பதிவாகி உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில்..
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.
தென்தமிழக மாவட்டங்களில் கீழ் ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை , விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள்வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“