அடுத்த 10 தினங்கள் சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
நாளை மழைக்கு வாய்ப்பு
திங்கள்கிழமை (ஆக.5) தமிழ்நாட்டின் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும். மேலும் 30-40 கி.மீ வேகத்தில் வலுவான காற்று வீசக்கூடும்.
மேலும், கோவை, நீலகிரி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து 6 முதல் 7ஆம் தேதிவரை புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையடுத்து 9-10ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகப்பட்ச வெப்ப நிலை 37 டிகிரி செல்சியல் ஆகவும் குறைந்தப்பட்ச வெப்ப நிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 8ஆம் தேதிவரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று 35-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் வங்கக் கடலில் வேகமாக காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“