coimbatore | கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடம், பழைய கட்டிடம் என இரண்டு கட்டிடங்களிலும் 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக இங்கு ஒவ்வொரு துறையைச் சார்ந்த அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் மட்டுமே பணி செய்து வருகின்றனர்.
அதேபோல் பழைய கட்டிடத்தில் உள்ள தரை தளத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இ சேவை மையம்,ஆதார் அட்டை திருத்தம், முதலமைச்சரின் காப்பீடு திட்டம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தரைத்தளத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடைய அங்குள்ள கழிவறைகள் சுத்தம் செய்து சுமார் 2 மாதத்திற்கு மேலாக ஆகிறது.இதனால் அருகில் உள்ள அரசு அலுவலகங்கள், பத்திரிக்கையாளர் அறைகள் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி மையமாகவும் இந்த கழிவறை செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த கழிவறையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூ லிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வீசபட்டுள்ளது.
புதிய கட்டடங்களில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமே இருப்பதால் அங்கு தினந்தோறும் கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஆனால் பழைய கட்டிடங்களில் அரசு ஊழியர்கள் மட்டுமே அதிக அளவில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு வரும்போது மட்டும் கழிவறை சுத்தப்படுத்திய நிலையில் தற்போது அதுவும் செய்யப்படாமல் கழிவறை சாக்கடை போன்ற காட்சியளிக்கிறது.
இந்த நிலைமையை கண்டு கொள்வாரா மாவட்ட ஆட்சியர்? என்று அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“