தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி, ஜன.27ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “மகாத்மா காந்தியடிகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து தெரிவித்தள்ளார்.
மகாத்மா காந்தியை அவமதிப்பது 140 கோடி இந்தியர்களை அவமதிப்பது ஆகும்” என்றார். மேலும், ஜன.27ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றார்.
காந்தி குறித்து ஆளுநர்
ஜன.23ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, “காந்தி தலைமையிலான ஒத்துழையாமை இயக்கத்தை விட, பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து இந்திய வீரர்களால்தான் சுதந்திரம் கிடைத்தது.
நேதாஜி இல்லாவிட்டால் சுதந்திரம் கிடைத்திருக்காது” என்றார். தொடர்ந்து பேசிய ஆர்.என். ரவி, “நேதாஜியை நாம் இன்னமும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.
அவர் 70 ஆண்டுகளுக்கு முன்னரே ராணுவத்தில் பெண்களுக்கு இடம் அளித்தார். காந்தியின் 1942 ஒத்துழையாமை இயக்கம் பெரிதளவு செயல்படவில்லை. 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைக்க நேதாஜிதான் காரணம்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“