Congress | Kanyakumari District | கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வெள்ளமடியில் தனியார் கல்லூரி ஒன்றில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கலந்துகொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அல்கா லம்பா, “பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்துதான் தொடங்கினார்.
இந்த இடத்திற்கு நான் வந்துள்ளதில் பெருமிதம் அடைகிறேன். தற்போது ராகுல் காந்தி பாரத் நியாய் யாத்திரையில் உள்ளார். மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு இன்னமும் சட்டமாக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர் இது சட்டமாக்கப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. ஏற்கனவே நடந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாநிலங்களான தெலங்கானா, கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ளோம்” என்றார்.
மேலும் பெண்களை மதிக்கும் கட்சி காங்கிரஸ் என்று அவர் கூறினார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, “இந்தியா கூட்டணி 400-க்கும் அதிகமான இடங்களில் வொற்றி பெற்று, பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படும்” என்றார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“