அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து செந்தில் பாலாஜியை 23ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த, தற்போதைய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து பணம் பெற்றதாகவும் அப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஆளுனரிடம் புகார் அளித்தது. இந்நிலையில் ஜூன் 13ம் தேதி காலை முதல் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் அவர் இருக்கும் அறை வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்நிலையில் 13ம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வங்கிக் கணக்குகளை சோதனையிட்டதில், அவரது வங்கி கணக்கில் 1 கோடியே 34 லட்சம் ரூபாயும், மனைவி மேகலா கணக்கில் 29 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாயும், டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது வருமானவரிக் கணக்கில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுடன் இது கூடுதலாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று மாலை நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்து, 23-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது திமுக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“