Advertisment

செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு: சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சவுக்கு சங்கருக்கு எதிராக செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
The court has imposed a fine of 1 lakh rupees on Chawku Shankar

சவுக்கு சங்கர்

முன்னாள் அரசு ஊழியரும், இன்னாள் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், பல்வேறு திரை மறைவு விஷயங்கள் குறித்து அவரது சவுக்கு ஆன்லைனில் எழுதிவருகிறார்.

தொடர்ந்து, வலையொளியில் தோன்றி தனது அரசியல் கருத்துக்களை முன்வைத்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில் பாலாஜி குறித்து இவர் தெரிவிக்கும் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தும்.

Advertisment

இந்த நிலையில் செந்தில் பாலாஜி, கரூரில் ரூ.300 கோடி மதிப்பில் பங்களா கட்டுவதாக சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த மாதம் சவுக்கு சங்கருக்கு எதிராக 4 பிரிவின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மேலும், ட்வீட் செய்யும்போது வார்த்தைகளில் கவனம் தேவை என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

முன்னதாக சவுக்கு சங்கர் நீதிபதியை விமர்சித்த குற்றத்துக்காக சிறைக்கு சென்றார். அங்கு அவருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகளையும் அவர் வலையொளி சமூக வலைதளம் மூலமாக மக்கள் முன் பொதுவெளியில் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji Sankar Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment