பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை!

கொறடாவின் உத்தரவை மீறியதாக அளிக்கப்பட்ட புகார் மீது  சபாநாயகர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், இதில் நீதிமன்றம்  தலையிட முடியாது.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

பன்னிர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

பன்னிர்செல்வம் உள்ளிட்ட 11  எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பன்னிர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றார். கொறடாவின் உத்தரவை மீறியதாக அளிக்கப்பட்ட புகார் மீது  சபாநாயகர் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், இதில் நீதிமன்றம்  தலையிட முடியாது. 11 பேரை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட முடியாது என்று வாதிட்டார்.

சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட முடியுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சட்ட பேரவை செயலர் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சட்டப்பேரவை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தாத காரணத்தால் இந்த வழக்கில் சட்ட பேரவை செயலாளர் தரப்பில் பதில் அளிக்க அவசிமில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு, திமுக தரப்பு பதில் வாதத்திற்காக வரும் 27 ஆம் தேதிக்கு  தள்ளி வைக்கப்பட்டது.

Web Title: The court has no power to investigate 11 mlas

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com