2006-2011 திமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டம் வானூர் பூத்துறையில் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செம்மண் அளவுக்கு எதிராக எடுக்கப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த செம்மண் குவாரி வழக்கில் வரும் 8ம் தேதி தாசில்தார் குமாரபாலன் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். பொன்முடி மகன் கவுதம சிகாமணி செய்த முதலீடு ஒன்றுதான் இந்த ரெய்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இவர் இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். அங்கே இருக்கும் பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008ல் முதலீடு செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“