’நீங்க இந்த சாமியை கும்பிடக்கூடாது’..தீண்டாமையின் உச்சக்கட்டமாய் கோயிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பெண்!

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது

புதுச்சேரியில் மற்றொரு சமூகத்தைச் சார்ந்த பெண் ஒருவரை, கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’தீண்டாமை’ நம் நாட்டை விட்டு கட்டாயம் விரட்டியடிப்பட வேண்டிய ஒன்று. என சொன்ன தலைவர்கள் மட்டும் இந்த வீடியோவைப் பார்த்தார்கள் என்றால், மனம் நொந்து போவார்கள். ஒரு பக்கம் கல்வியில் வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியா, பெண்கள் முன்னேற்றம் என்று சென்றுக் கொண்டிருக்கும் நாட்டில் தீண்டாமை மட்டும் அடிக்கடி தலையைக் காட்டி செல்கிறது.

”ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது” என்ற வசனம் வெறும் சினிமாவிற்கு மட்டுமில்லை நடைமுறை வாழ்க்கைக்கும் தான். இன்று கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண்ணிற்கு நடந்த அவலம் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளது கூனிச்சம்பட்டு என்ற கிராமம். இங்குள்ள காலனி பகுதி ஒன்றில் வசித்து வருபவர் தான் இளம்பெண் கீதா. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த ஊரில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றிருக்கிறார். அப்போது அந்த ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கீதாவை கோயில் சாமி கும்பிடக் கூடாது என்று விரட்டியுள்ளனர்.

பதிலுக்கு, கேள்வி எழுப்பிய அந்த பெண்ணிடம் “ உங்கள் சாமியை நீங்கள் கும்பிடுங்கள். இந்த சாமியை கும்பிடாதீர்கள். இங்கெல்லாம் நீங்கள் வரக் கூடாது. உங்கள் கோயிலுக்கு நாங்கள் வருகிறோமா? உங்கள் கோயிலுக்குப் போயி சாமி கும்பிடு போ” என்று விரட்டுகின்றனர்.

பதிலுக்கு கீதாவும், அவர்களிடம் தொடர்ந்து வாதாடுகிறார். ”கோயிலில் உங்கள் கோயில், எங்கள் கோயில் என்று பாகப் பிரிவினை கிடையாது. சாமியை எங்கு வேண்டுமானாலும் கும்பிடலாம்” என்று கீதா கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த பெண்ணை அடிக்கவும் கை ஓங்குகின்றனர். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்ஃபோன் மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. மேலும், சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

கோவிலுக்குள் வராதே: வைரல் வீடியோ

கோவிலுக்குள் வராதே: வைரல் வீடியோ//youtu.be/TnBGVO9cZxo

Posted by Dinamalar – World's No 1 Tamil News Website on 1 मे 2018

 

நன்றி: தினமலர்

×Close
×Close