Dmdk | Aiadmk | Lok Sabha Election | Premalatha Vijayakanth | 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடக்கிறது. முடிவுகள் மே 15ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
எதிர்க்கட்சியான அதிமுக அணியில் தேமுதிக, புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த நிலையில் இன்று தேமுதிக, அதிமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார்.
அதிமுக தரப்பில் மூத்த நிர்வாகி எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக, தேமுதிக கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது என சூசகமாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இது தவிர தேவேந்திரன் யாதவ், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துள்ளனர். பா.ம.க தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“