திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடந்துவருகிறது. இந்த மாநாட்டில், “ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து. “தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேரந்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும் .
மாநில சுய ஆட்சி அடிப்படையில் மாநில அரசின் அதிகாரத்தை வலிமைப்படுத்த வேண்டும் ; ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் ரெய்டுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, “மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும். பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதல்வர் செயல்பட வேண்டும் .
குலக்கல்வியை எதிர்த்து இளைஞரணி போராட்டம் தொடரும்; வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.6000 வழங்கிய முதல்வருக்கு நன்றி" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, “வரலாறு காணாத மழை நேரத்தில் மக்களை காத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“