முட்டைக்கு நியாயவிலை - யை நிர்ணயிக்க கோரிய மனுவை 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்தது.
முட்டைக்கு நியாயமான விலை
இது தொடர்பாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த முட்டை வியாபாரி அக்ரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல், கரும்பு போன்ற விளைபொருட்களுக்கு அரசு விலை நிர்ணயிப்பதைப் போல முட்டைக்கும் விலை நிர்ணயிக்க வேண்டும்.
தமிழகத்தில் முட்டையின் உற்பத்தி செலவு 2 ரூபாய் 75 காசுகள் உள்ள நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, 4 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு இக்குழுவுக்கு அதிகாரம் இல்லை’’ என மனுவில் தெரிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு என்பது அரசு அமைப்பா? அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பா?
எனவே ஏழை, எளியவர்கள் வாங்கும் விலையில் முட்டைக்கு விற்பனை விலையை நிர்ணயிக்க வேண்டும் எனவும், தற்போது அதிக விலை நிர்ணயித்துள்ளது.
குறித்து விசாரிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும். நியாயமான விலையை நிர்ணயிக்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கபட்டுள்ளதாகவும், எனவே அதனை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
நீதிபதி ஆர்.மகாதேவன்
இந்த மனு நீதிபதி ஆர். மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் என முட்டை கொள்முதல் தொடர்பாக டெண்டர் கோரியுள்ளது.
அதற்கான ஒப்பந்தம் புள்ளியை சமர்பிக்க வரும் 5 ஆம் தேதி கடைசி நாள். எனவே அதற்குள் விலை நிர்ணயம் செய்ய குழுவை ஏற்படுத்த வேண்டும் என வாதிட்டார்.
இது தொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுப்பதாக தமிழக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, மகாதேவன் 10 நாட்களில் குழு அமைப்பது தொடர்பாக கோரிக்கை மனு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.