Advertisment

ஓ.பி.எஸ், ரவீந்திரநாத் மீதான தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி

ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி. ரவீந்திரநாத் தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
O. Panneerselvam about alliance with EPS Tamil News

முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

2019 மக்களவை தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் மற்றும் 2021ல் ஓ. பன்னீர் செல்வம் தவறான தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அதாவது தேர்தல் பிரமாண பத்திரத்தில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகன் சொத்து விவரங்கள் உள்பட தவறான தகவல்களை தெரிவித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை நிலானி என்பவர் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

Advertisment

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி ரவீந்திரநாத்துக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Panneer Selvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment