Tamil Nadu | Lok Sabha Election | நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, சென்னையில் இன்று (ஏப்.4,2024) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தமிழ்நாட்டில் இதுவரை 13 லட்சம் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மார்க் 3 இயந்திரம் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ளது” என்றார்.
தமிிழ்நாட்டில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்து பேசிய சத்ய பிரதா சாகு, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. அதில் 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை” என்றார்.
543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி முடிவடைகிறது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும். அந்த வகையில், 1ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 3வது கட்டம் மே 7ம் தேதியும், நான்காம் கட்டம் மே 13ம் தேதியும், 5வது கட்டம் மே 20ம் தேதியும், 6வது கட்டம் மே 25ம் தேதியும், கடைசி மற்றும் 7ம் கட்ட தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“