Ramanathapuram | இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் கே. நவாஸ் கனியின் வர்த்தக நிறுவனங்களில் அமலாக்க இயக்குனரகம் (ED) அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 14, 2024) சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
ராமநாதபுரம் எம்.பி.யான நவாஸ் கனி, இம்முறை இந்தியா கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தமிழ்நாடு பிரிவின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் இவரின் வீட்டில் சோதனை நடந்துள்ளது. இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருள்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தினார்கள்.
தியாகராய நகர், திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“