அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
Advertisment
தொடர்ந்து அரசு ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புழல் சிறைக்கு திரும்பினார். அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.
தற்போது அவரிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (ஆக.9) சோதனை நடத்தினார்கள். அதாவது, கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களாவில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இன்று காலை இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனையை நடத்தினர். இந்த வீட்டில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனை நடத்தினார்கள்.
இதற்கிடையில் தற்போதைய சோதனை செந்தில் பாலாஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடைபெற்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“