சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.
சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலை 7 மணிக்கே அதிகாரிகள் வந்துவிட்டனர். அவர்கள் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவர்களுடன் பாதுகாப்பு படையினரும் வந்திருந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் திமுகவினர் குவிந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பொன்முடி வீட்டில் உள்ள பீரோ திறக்கப்பட்டது. எனினும் லாக்கரை திறக்க முடியவில்லை. போலீசார் சாவி தயாரிக்கும் நபர் ஒருவரை அழைத்து வந்தனர்.
அதுவும் பயன் அளிக்கவில்லை. அவர் ஊடகங்களிடம் பேசுகையில், 2 பீரோ உள்ளது. சாவி போட்டு திறந்துள்ளோம். ஆனால், லாக்கரை திறக்க முடியவில்லை” என்றார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் லாக்கரை உடைத்து அதில் உள்ள பொருள்களை சோதனை செய்யக் கூடும் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“