தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழக பேருந்துகளில் முன்பதிவு காலம் 30 நாள்களில் இருந்து 60 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். இந்த அறிலிப்பை தொடர்ந்து, 60 நாள்களுக்கு முன்பே பயணத்துக்கு திட்டமிடலாம். முன்பு இந்த வசதி 30 நாள்கள் வரை மட்டுமே இருந்தது. பயணிகள் www.tnstc.in என்ற தளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாள்களில் இருந்து 60 நாள்களாக மாற்றம் செய்யப்பட்டது பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“