New Update
00:00
/ 00:00
Udhayanidhi Stalin | பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (எஸ்இடிசி) பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் இனி யூபிஐ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.
ரொக்கமில்லா கட்டண முறையை (டிஜிட்டல்) புதன்கிழமை தொடங்கி வைத்து, கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முன்னிலையில் நடத்துனர்களுக்கு 26 மின்னணு டிக்கெட் இயந்திரங்களை (இடிஎம்) விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிலையில், இன்று (பிப்.29,2024) முதல் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் 129 பேருந்துகளில் டிஜிட்டல் கட்டண முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எம்.டி.சி நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, "அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள், அனைத்து எம்.டி.சி பேருந்துகளிலும் ரொக்கமில்லா கட்டணம் செலுத்தும் முறை பொருத்தப்படும்" என்றார்.
இது குறித்து எஸ்இடிசியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகையில், “சென்னையில் இருந்து ராமேஸ்வரம், கூடலூர், கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சோதனைக் காலத்திற்குப் பிறகு, இந்த அமைப்பு வரும் நாட்களில் அனைத்து வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் யூபிஐ பயன்பாடுகளைப் பயன்படுத்தி பயணிகள் பணம் செலுத்த முடியும். எஸ்.இ.டி.சி (SETC) ஆனது ஒரு நாளைக்கு சுமார் 75,000 பயணிகளை ஏற்றிச் செல்கிறது, 800க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், யூ.பி.ஐ (UPI) கட்டண முறை விரைவில் டி.என்.எஸ்.டி.சி (TNSTC) பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்து செயலாளர் பானீந்திர ரெட்டி தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.