Advertisment

தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களின் கட்டணம் இரு மடங்கு உயர்வு: அரசாணையை வழங்கிய மு.க. ஸ்டாலின்!

இவர்களுக்கு 2011ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அரசு கணிசமாக கட்டணத்தை உயர்த்தி வழங்கியது. அதன்பின்னர், 10 வருட காலம் கட்டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.

author-image
WebDesk
New Update
M K Stalin govt hike government lawyers fees

அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை இன்று (அக்.16) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்திய அரசாணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு வழக்கறிஞர்களுக்கு திங்கள்கிழமை (அக்.16) வழங்கினார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இதில், அரசு சார்பாக வழக்கினை நடத்திட அரசு வழக்கறிஞர்கள் பலர் நியமிக்கப்பட்டு, சுமார் 700-க்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் அரசு சார்பாக வழக்கினை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இவர்களுக்கு 2011ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அரசு கணிசமாக கட்டணத்தை உயர்த்தி வழங்கியது. அதன்பின்னர், 10 வருட காலம் கட்டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா அளித்த பரிந்துரை கடிதத்தை தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.

அதனடிப்படையில்,  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (அக்.16) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை இன்று (அக்.16) வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் , சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment