/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-23T110121.747.jpg)
கோவை பீளமேடு பகுதி வரை பயணித்த தி.மு.க எம்.பி கனிமொழி பெண் ட்ரைவர் ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா விவகாரம் குறித்து பேருந்தில் இருந்த பயிற்சி பெண் நடத்துனர் அன்னத்தாய் விளக்கம் அளித்தார்.
பெண் நடத்துநர் விளக்கம்
இது தொடர்பாக அவர், “நான் பயிற்சி நடத்துனராக இருக்கிறேன். இன்று கனிமொழி எம்பி வந்தார். நான் அவரிடம் இது போன்று நடத்துனர் பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்து பயண சீட்டிற்கு காசு கேட்டேன்.
அப்போது ஷர்மிளா நீங்கள் ஒன்றும், காசு தர வேண்டாம் நான் எடுக்கிறேன். எனது அப்பா தருவார் என்று கூறினார். அப்போது நான் கனிமொழி அவர்களுக்கு எதற்கு செலவு வைக்க வேண்டும் என்று நினைத்து நமது கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணி அவரிடம் பயணச்சீட்டுக்கு காசு கேட்டேன்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Anna-thai.jpg)
அப்போது கனிமொழி சிரித்துக்கொண்டே எனது உதவியாளர் தருவார் என்று கூறினார். அப்போது இரண்டு நபர்கள் 120 ரூபாய் கொடுத்துவிட்டு ஆறு பயணச்சீட்டு வாங்கினார்கள். பிறகு பேருந்தில் கனிமொழியிடம் முதல்வர் அப்பா நன்றாக உள்ளாரா எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்று பேசினேன்.
அப்போது கனிமொழி எம்பி, எல்லோராலும் மக்கள் பணி செய்ய முடியும் அதற்கு சான்றாகத்தான் ஷர்மிளா விளங்குகிறார் என்று கூறினார். பிறகு கனிமொழி அவர்களும் ஷர்மிளாவும் இறங்கிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து வேறு ஒரு ஓட்டுநர் பேருந்தை இயக்கினார். பேருந்து சோமனூர் சென்று வந்த பிறகு மீண்டும் இறங்கிய இடத்திலேயே ஷர்மிளா ஏறினார்.
பிறகு திடீரென்று நான் பேருந்தில் இருந்து இறங்குகிறேன் எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை என்று கத்தினார். உடனடியாக நான் ஷர்மிளாவிடம் என்னால் தான் இறங்குகிறாயா என்று அவரிடம் நானாக பலமுறை மன்னிப்பு கேட்டேன்.
அப்போது அவர் உங்களுக்கும் எனக்கும் எந்தவித பேச்சும் கிடையாது என்று என்னிடம் தெரிவித்தார். அப்போது கூட நான் அவரிடம் என்னால் நீங்கள் இறங்கினால் எனது வேலை தான் பறி போய்விடும். எனவே உங்களுடைய கண் பார்வையை மீறி இனி நான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறினேன்.
அப்போது ஷர்மிளா என்னிடம் நீங்கள் சுயநலமாக பேசுகிறீர்களா உங்களுக்கு வேலை வேண்டும் என்பதற்காக நான் இறங்காமல் இருக்க வேண்டுமா. எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை நான் அலுவலகத்தில் சென்று பேசிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்” என்றார்.
மேனேஜர் ரகு
மூன்று மாதமாக ஷர்மிளா பேருந்தை இயக்கி வருகிறார். வேலையில் எந்தப் பிரச்னையும் இல்லை. மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு லேடி கண்டக்டர் அவர்களாகவே வந்து சேர்ந்தாங்க.
ஷர்மிளா தன்னிடம் எந்த பெண் கண்டக்டரையும் தன்னுடன் பணியில் அமர்த்த வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் ஓட்டும் பேருந்தில் ஒரு பெண் கண்டக்டரை பணியில் அமர்த்தினேன். பெண் கண்டக்டரை அமர்த்தினார் என் பாப்புலாரிட்டி போய்விடும் என தன்னிடம் ஷர்மிளா பேசினார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Raghu.jpg)
அனைவருக்கும், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரிடம் சொன்னேன். கடந்த வியாழக்கிழமை முதல் மூன்று நாள்கள் ஷர்மிளா வேலைக்குவரவில்லை.
காரணம் கேட்ட போது பெண் கண்டக்டரை வேலைக்கு எடுத்ததால், அவர் கடந்த வியாழக்கிழமை பணிக்கு வரவில்லை என மற்ற பணியாளர்கள் என்னிடம் சொன்னார்கள்.
இன்று கனிமொழி எம் பி வந்ததால் அவர் பணிக்கு வந்தார். அவர் இறங்கியவுடன் ஷர்மிளாவும் இறங்கிவிட்டார். ஷர்மிளாவின் புகழ் குறைந்து விடக்கூடாது என்பதால் பிரச்னை செய்வதாக தெரிவித்தார்.
நான் வேறொரு ஓட்டுநரை அனுப்பி பேருந்து சோமனூர் போய்விட்டு திரும்பி வரும்போது ஷர்மிளா ஏறி அலுவலகம் வந்தார். வந்தவர் நான் வேலைக்கு வரலைன்னு சொல்லிட்டு போய்விட்டார். நாங்கள் வேலைக்கு வரவேண்டாம் என சொல்லவில்லை. அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுப்பது அவருக்கு பிடிக்கவில்லை என்றார்.
உரிமையாளர் துரை கண்ணன்
கனிமொழி வரும் பொழுது இது குறித்து என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாமே என்று தான் அவரிடம் நான் கூறினேன். தற்போதும் ஷர்மிளா பணியில் தான் உள்ளார்.
அவர் தான் பாதியில் இறங்கிச் சென்று விட்டார். நான் அவரது தந்தையை இதுவரை பார்த்தது கூட இல்லை, இன்று தான் பார்த்தேன்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Owner-Kannan.jpg)
ஷர்மிளா வேலைக்கு சேரும்பொழுது பார்த்தேன் பிறகு இடையில் ஒரு முறை செய்தியாளர்கள் பேட்டி எடுக்கும் பொழுது பார்த்தேன் அடுத்தபடியாக இன்று தான் அவரை பார்க்கிறேன்.
எம்பி வரும்பொழுது முன்னாலேயே தெரிவித்து இருந்தால் இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து இருக்காது என்று தான் அவரிடம் கூறினேன். வானதி சீனிவாசன் வந்ததும் எனக்கு தெரியாது இன்று கனிமொழி வந்ததும் எனக்கு தெரியாது” என்றார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.