Advertisment

மீன்பிடி தடைக்காலம்: ரூ.8 ஆயிரம் நிவாரணம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுமா தி.மு.க.? மீனவர்கள் எதிர்பார்ப்பு

கன்னியாகுமரியில் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது.

author-image
WebDesk
May 31, 2023 20:14 IST
The fisherman

மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்கவுள்ள நிலையில், திமுக அறிவித்த ரூ.8 ஆயிரம் நிவாரணத்தை இந்த ஆண்டாவது வழங்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் கடலில் மீன் பிடிப்பதற்கு 60 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் இரண்டு எல்லைக் கோடு வகுத்துள்ளனர்.

Advertisment

அதன்படி, குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமும் டம் பகுதியில் ஆண்டு தோறும் ஏப்ரல்15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடைக் காலம் ஆகும்.

தொடர்ந்து, குமரி மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம்(லைட் ஹவுஸ்), குளச்சல், தேங்கபட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையும் மீன்பிடி தடைக் காலம் அமலில் இருக்கும்.

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடித்தல் தொழில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மீன்பிடி தடைக் காலத்தில் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அளித்து வந்தது.

அதனை திமுக ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க உள்ளதாக அறிவித்தது. இந்த வாக்குறுதியை இந்த இரண்டாவது தடைக் காலத்திலாவது நிறைவேற்ற வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Dmk #Fishermen #Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment