/tamil-ie/media/media_files/uploads/2023/08/Suchindrum-swamy.jpg)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இன்று கொடியேற்றம் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுலிங்கசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா இன்று (ஆக.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் 9ம் நாள் திருவிழாவில் நடைபெறும். திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, குமரி மாவட்ட திருகோவில் அறக்கட்டளைகள் குழு தலைவர் பிரபா இராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.