கன்னியாகுமரி முட்டம் கடற்கரை பகுதியை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.84 கோடி ரூபாய் செலவிலான மேம்பாட்டு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலங்களில் முட்டம் கடற்கரையும் ஒன்று. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட முட்டம் கடற்கரையை மேம்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், முட்டம் கடற்கரையை சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்த 2.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து, அந்தப் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் எம்.பி விஜய்வசந்த் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“