புதுச்சேரியில் வருகின்ற 30 ,31 ஜி 20 மாநாடு மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இது, நாளை முதல் அமலுக்கு வருகிறது என புதுச்சேரி கலெக்டர் வல்லவன் தெரிவித்தார்.
ஜி-20 அமைப்பின் மாநாடு கூட்டம் புதுச்சேரியில் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான. அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், இந்திய நாட்டின் சுற்றுச்சூழல், தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கலந்துகொண்டு உரையாட உள்ளனர்.
மாநாடு நடைபெறுவதையொட்டி ஜி20 சின்னத்தை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பல்வேறு வகையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
ஜி20 கூட்டம் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள்
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருத்தினை கொண்டு பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டடு வருகின்றன.
ஜி20 மாநாடு நடைபெறும் தினங்களில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் மின்விளக்குகளால் மின்னும்.
மாநாடு நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் யாருக்கும் தடைகள் இல்லை. தவறான தகவல் பரப்பிய கார்த்தி என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அழைப்பாளர் என யாரும் இல்லை. தலைமை பொறுப்பு ஏற்கும் வகையில், இந்தேனேசியா, இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமை ஏற்கின்றனர்.
-
பாதுகாப்பு பணியில் போலீசார்
75 உறுப்பினர்கள் இந்த ஜி20 கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக. அரக்கோணத்தில் இருந்து 37 பேர் கொண்ட என்.டி.ஆர்.எப் குழு வந்துள்ளது.
இந்த மாநாட்டில் ஒட்டுமொத்த மற்றும் நீண்டகால வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கப்பபட உள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ளும் நபர்கள் தங்கும் இடம் மற்றும் மாநாடு நடைபெறும் இடங்களில் 144 தடை உத்தரவு நாளை காலை முதல் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வல்லவன் தெரிவித்தார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/