காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு

கூலித் தொழிலாளியான சிறுமியின் தந்தை, தனது மகளை நல்ல முறையில் படிக்க வைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்ததாக

காதலிக்க மறுத்தத்கால், பெட்ரோல் ஊற்றி ஏரிக்கப்பட்ட சிறுமி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த  சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலமுருகன் என்ற இளைஞன் நீண்ட காலமாக ஒருதலையாக காதலித்து வந்தான்.நாள் தோறும் சிறுமியை பின் தொடர்ந்து, தன்னை காதலிக்கும்மாறு பாலமுருகன் வற்புறுத்தியிருந்தான்.

இதனால், சிறுமியின் தந்தை பாலமுருகன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆத்திரமடைந்த அந்த இளைஞன் கடந்த (16.218.) அன்று சிறுமி, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தெருவில் மறைந்திருந்து, சிறுமியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தான்.

சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, ஓடி வந்த பொதுமக்கள் தீயை அணைத்து, திருமங்கலம் அரசு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியின் உடல் முழுவதும் தீ பரவியதால், மருத்துவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இதுக் குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் காவல் துறையினர், பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி, இன்று(27.2.18) பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பு அந்த குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கூலித் தொழிலாளியான சிறுமியின் தந்தை, தனது மகளை நல்ல முறையில் படிக்க வைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் உறுதியாக இருந்ததாக அவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

×Close
×Close